பிரபலமான இடுகைகள்

பிரபலமான இடுகைகள்

பிரபலமான இடுகைகள்

திங்கள், 8 மார்ச், 2010

ஒன்லைன் கதை------

முப்பது வருடத்திற்குமுன் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டிப் பறந்த பரந்தாமன் தன் ஒரேமகன் பார்த்திபனின் மறைவுக்குப்பின் தன் தொழிலில் கவனம் செலுத்தாது தானும் மெலிவடைந்து நாளடைவினில் இறந்துபோகவும் அவரதுமனைவி கோசலையம்மாள் வாடகைக்கு குடியிருக்கவீடு தேடி வந்த இடத்தில் பார்த்திபனின் பள்ளிதோழன் சரவணன் பார்க்கின்றான்.வந்த இடம் ஏற்கனவே பரந்தாமன் பிளாட் போட்டு விற்ற இடம் அந்த இடமுழுவதும் பரந்தாமன் நகர் என்று பெயரிடப்பட்ட பலகை காட்சி அளித்தது,இன்னும் என்ன பரிதாபம் என்றால் கோசலையம்மாள் அமர்ந்திருக்கும் கோவில் கூட பரந்தாமன் நகரில் அமைந்த அந்தக் கோவிலுக்குக்கூட சிறப்பாக அவர் வாழ்ந்த காலத்தில் பரந்தாமன் தான் பத்து செண்ட் இடம் இனாமாக கொடுத்திருக்கின்றார் ,அதில் அமைந்துள்ள கல்வெட்டில் கூட அவர் பெயரில் உபயம் கோவில்மனையிடம் என்று இருந்தது, அதை சரவணன் சோகத்தோடு சொல்ல கோசலையம்மாள் மிகுந்த சோகத்தோடு நிற்கின்றார்.

செவ்வாய், 2 மார்ச், 2010

காலம் கனிந்ததடி கனவும் நனவானதடி உனது அன்புக் காதலனும் வருவானே!.

காலம் கனிந்ததடி கனவும் நனவானதடி
உனது அன்புக் காதலனும் வருவானே!.
ஆதலினால் உந்தன் காதல் நோயும் தீர்ந்திடுமே!
அன்புக் காதலியே!
ஒளிமின்னும் அழகிய கண்களை உடையவளே!கார்கால
மழையும் பெய்கிறது, மணக்கும் முல்லையும் மலர்கிறது, நிமிர்ந்த குருந்த மரங்களும் அரும்புகளைக் காண விளைந்தனவே!. உனது காதலனும் வருவானே!. ஆதலினால் உந்தன் காதல் நோயும் தீர்ந்திடுமே!

காதலன் அவனே விரைந்து வருவானே வந்தவுடன் -அவன் வந்தவுடனே -எங்கள் . இல்லக் கதவுகளைத் திறந்து காண்போமே"

காதலன் அவனே
விரைந்து வருவானே வந்தவுடன் -அவன் வந்தவுடனே
-எங்கள் . இல்லக் கதவுகளைத் திறந்து காண்போமே"

ஆசையினாலே தேம்பிடும், என்னிள நெஞ்சே!-அன்புக் காதலனே!
தேன் கலந்த சொல்லினையே தெளித்தானோ?
தலைவியென் மாவடுவைப் பிளந்தாற் போன்ற என்னிரு கண்களிலிருந்து ஆனந்தகண்ணீர் மெதுவாக வழிந்தோடுதே! அந்தோ!என் நெஞ்சே அவன் சென்ற நெடிய பாதையின் வழியே போய்க் கொண்டிருக்கின்றதே!காதலன் அவனே
விரைந்து வருவானே வந்தவுடன் -எங்கள் . இல்லக் கதவுகளைத் திறந்து காண்போமே"