எல்லோரும் இன்புற்று இருக்க எண்ணாத தத்துவத்தின் பின்னாலே
எந்தவித பயனின்றி சென்று வாழ்வதில் சாதல் மேலன்றோ?
என்னதான் கற்றால் என்னடா!
எப்பொருளும் பெற்றால் என்னடா!
எந்த பதவி கொண்டாலும் என்னடா!
எந்தபுகழ் அடைந்தாலும் என்னடா!
எல்லோரும் இன்புற்று இருக்க எண்ணாத தத்துவத்தின் பின்னாலே
எந்தவித பயனின்றி சென்று வாழ்வதில் சாதல் மேலன்றோ?
சனி, 31 ஜூலை, 2010
தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/உனது அன்புள்ளத்தையே! நானுமின்னும் அறிந்திலேனே!
உனது அன்புள்ளத்தையே! நானுமின்னும் அறிந்திலேனே!
என்காதல் வித்தானவளே! கோடிக்காலத்துப் பயிரானவளே!
இனிமையாய் விளைந்த கனியானவளே-அன்புப்
பூவானவளே! புன்னகை மனதானவளே!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/உன்னை மறந்ததாலே- நானும் உலகை மறந்தேனோ?-அன்பு உவகை மறந்தேனோ?-காதல் உள்ளம் மறந்தேனோ?
உன்னை மறந்ததாலே- நானும்
உலகை மறந்தேனோ?-அன்பு
உவகை மறந்தேனோ?-காதல்
உள்ளம் மறந்தேனோ?-என்னைப் புரிந்து நீயும்!
என்னை அறியாமலே !எனக்குள்ளே நீயிருக்க!
உன்னை அறியாமலே! என்னைப் புரியாமலே!
எனைநான் மறந்ததேனோ?
என்னை மறந்ததாலே !- நானும்
உன்னை மறந்தேனோ?
உன்னை மறந்ததாலே- நானும்
உலகை மறந்தேனோ?-அன்பு
உவகை மறந்தேனோ?-காதல்
உள்ளம் மறந்தேனோ?

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/வாழ் நாளெல்லாம் வறுமையின்றிவாழும் சமுதாயம் உருவாகாதோ?-விலைகள் ஏற்றமில்லாத பொற்காலம் தான் இன்னாட்டில் வரவேண்டுமே!
தாயாரே ! தாயாரே!நீங்களோ!
பெற்றுஅலுக்க வில்லை தாயாரே- நான் ஏன் தானோ?
பிறந்து அலுக்கின்றேன் தெரியவில்லை!தெரிந்துகொள்ள போனபோதோ!
வாக்குரிமை விற்றுவிட்டு வறுமைதனில் வாடுகின்றேன்!-அஞ்சலுறைக்
காசுக்காக அடிமையானேன் தேர்தலன்று ஓர் நாளிலே!-ஐந்து வருடமாக
சோத்துக்கு சிங்கியடித்து சீரழிந்தேன் விலைவாசியாலே!-அடுத்த
தேர்தலும் வந்திருச்சே ஆயிரம்ரூபாய்க்கே விலையாகிப் போனேனே!
வாழ் நாளெல்லாம் வறுமையின்றிவாழும் சமுதாயம் உருவாகாதோ?-விலைகள்
ஏற்றமில்லாத பொற்காலம் தான் இன்னாட்டில் வரவேண்டுமே!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/!தனியுடைமைக் கொடுமைக்கே விடிவுகாலம் ஒன்றுபட்ட இயக்கங்களின் வெற்றி வேணுமடா!
ஏட்டுக்குள்ளே அடங்கவில்லை-எந்த
எழுத்துலுமே பொருந்தவில்லை-இந்த
நாட்டுக்குள்ளே போலி அரசியல் குள்ளநரிகளெல்லாம்
ஏகமாகவே சதிராடுதே!
கூட்டுக்குள்ளே வாழுகின்ற
கூடிவாழும் பறவைகளும்-துரோகிகளின்
கூறுகெட்ட சதியாலே
மாறுபடும் இழி நிலையும் மாறாதோ?
ஜன நாயகம் கெட்டுத்தான் போயிடவே!
பண நாயகம் ஆட்சிதான் ஆனதடா!மனிதரையே
பிணந்தின்னும் சாத்திரமாய் ஏறிஅதிகாரம் செய்யும் கொடுமையடா!தனியுடைமைக்
கொடுமைக்கே விடிவுகாலம் ஒன்றுபட்ட இயக்கங்களின் வெற்றி வேணுமடா!

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)