பிரபலமான இடுகைகள்

பிரபலமான இடுகைகள்

பிரபலமான இடுகைகள்

சனி, 26 மார்ச், 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/-” பார்வதி அம்மா பார்வதி அம்மா நீங்கள் பிரபாகரனின் தாய்மட்டுமல்ல எங்களின் தமிழீழத் தாயே எங்களின் தமிழீழத் தாயே!

பார்வதி அம்மா பார்வதி அம்மா
நீங்கள் பிரபாகரனின் தாய்மட்டுமல்ல
எங்களின் தமிழீழத் தாயே
எங்களின் தமிழீழத் தாயே!
!-இனி
உங்களை தரிசிப்பது எப்போதம்மா!-ஈழத்
தேசியத் தலைவனின் தாய் என்ற
அன்புவிளக்கே அணைந்து விட்டாயம்மா!
ஈழதேசம் மட்டுமல்ல தமிழ்பேசும் தேசமக்கள்

உங்களைப் பிரிந்த எங்கள் இதயத்திலெல்லாமே?
இந்தபிரிவு ஆறாத காயமே
இந்த உலகம் முழுவதும் தாயே
சோகத்துள் மூழ்கிக் கிடக்கின்றதே

இனி நீங்கள் விட்டுச்சென்ற வீரப்பயணத்தை ஈழமண்ணில் நாங்கள் தொடர்ந்திடுவோம் தாயே!
சென்று வாருங்கள் தாயே! சென்று வாருங்கள்!!தாயே இன்னும் வீரத்தாய் பரம்பரையை உருவாக்கிடுவோம் தாயே!கோடிக் கோடியாகவே!
எண்ணிலடங்காத பிரபாகரன்களையே போராளியாகவே நிமிர்ந்திடச் செய்திடுவோம் தாயே!

இன்று சோகம் படர்ந்திருக்கும்
எங்களுக்கோர் இருண்ட நாள் என்றபோதிலுமே எங்களின் மீள்போரினிலே உங்கள்
அடிச்சுவட்டினிலே மீண்டும் ஈழமண்ணில் ஈழத்தமிழரின் புதிய வெளிச்சத்தை கண்டிடுவோம் தாயே!


முள்ளிவாய்க்கால் முற்றுக்கைக்குள் சிக்கி
கொடியோரின் கோட்டைக்குள் சிக்கி சிறையிருந்தீரே எங்கள் தாயே!
நீங்கள் சிந்திய ரத்தம் ஈரம் இன்னும் ஆறவில்லையே எங்கள் தாயே!
மீண்டும் நீங்கள் ஈழ சுதந்திர மண்ணில் பிறப்பெடுத்திடுவீரே எங்கள் தாயே!

எரிக்கும் நெருப்பும் உங்களைச் சுட்டுவிடாது தாயே!
சென்று வாருங்கள் தாயே! சென்று வாருங்கள் தாயே!!!
தமிழீழத்தில் வீரத்தை விதைத்து வைத்தவரே!எங்கள் தாயே!
சரித்திரம் தாங்கும் வீரனைப் பெற்றுத் தந்தவரே!எங்கள் தாயே!
விடுதலையின் போராளியே ஈழமண்ணின் தாயே!எங்கள் தாயே!
சென்று வாருங்கள் தாயே! சென்று வாருங்கள் தாயே!!!

தூக்கி அணைத்த ஈழப்பிள்ளைகள் எல்லாம் கண்ணீர் சிந்திடவே
உம் சிதைக்கு தீமூட்ட முடியாமல் தனைமறந்து ஈழமண்னை எண்ணி
செந்நீரினில் கரைந்து ஈழமண்ணே வறண்டு நிற்கும் பாலை நிலமாய் தாய்மண்ணிருக்க
இறுதி ஊர்வலப் பாதையிலும் கூடி நின்று சுதந்திரவாசமின்றி அடிமையின் விலங்குகளுக்குள்
அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் அதிகாரவர்க்கத்தின் ஆணவத்தின் பேய்தாண்டவமாடும் சுடுகாடாய் மாறிவிட்ட ஈழமண்ணின் இழி நிலையை எண்ணி மனங்குமுறி கண்கள் சிவப்பேறியே!உரிமை இழந்து வாழ்வாதாரமிழந்து நாடிழந்து வீடிழந்து சொந்தம் சுற்றமிழந்து
அடக்கப்பட்டு உணர்வுகள் இழந்த நிலையில் கம்பிவேலிக்குள் விலங்குகள் அணிந்த விலங்குகளிலும் இழிந்த உயிரற்ற உடலாகவே சொந்த வீடில்லாத அந்த தூர்ந்துபோன
வீட்டிற்குள் இருந்து கேவி அழும் நிலை எங்களுக்கும் வந்ததே அது
உங்களுக்கும் தானா? என்று விம்மும் நெஞ்சுடன்
விடை தருகிறோம் அம்மா
சென்று வாருங்கள் தாயே! சென்று வாருங்கள் தாயே!
மீண்டும் இம்மண்ணில் கோடிக் கோடி பிரபாகரன்களை உருவாக்கும் வாழும் எங்கள் ஈழமண்ணின் தமிழ்த்தாய்க்குலங்களே!!

பார்வதி அம்மா பார்வதி அம்மா
நீங்கள் பிரபாகரனின் தாய்மட்டுமல்ல
எங்களின் தமிழீழத் தாயே
எங்களின் தமிழீழத் தாயே!













தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/காதலிக்கும் காலத்துக்கு வயதில்லையே!-

காற்றின் அலைகளிலும் காணுகின்ற சுகமெல்லையே!
காதலி உன் நினைவலைகள் இல்லாத பொழுதுமில்லையே!

என் மனசு ஏனோ,
உன்னை எண்ணித் துடிக்கிறதே!-என் .
கண்கள் இரண்டும் இப்போதே இக்கணமே!
உன்னைக் காணத் தவிக்கிறதே!

அன்றும் இன்றும்
என்றும் இனிக்கும்
காதலுக்கு வயசில்லையே
காதலர்க்கு வயதுண்டு
காதலிக்கும் காலத்துக்கு வயதில்லையே!

முத்தங்களின் ஈரமில்லாத காதலில்லையே!
மூச்சுக்காற்றின் வெப்பமில்லாத நேசமில்லையே!
உணர்ந்து கொள்ளாத காதலுக்கு இன்பமில்லையே
புரிந்து கொள்ளாத காதலென்றும் நிறைவில்லையே!


காற்றின் அலைகளிலும் காணுகின்ற சுகமெல்லையே!
காதலி உன் நினைவலைகள் இல்லாத பொழுதுமில்லையே!

வியாழன், 24 மார்ச், 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்/ஹைக்கூ/-புரட்சிக் கோட்டைக்குள்ளே நானும் நுழைந்து விட்டேனே!”

புரட்சிக் கோட்டைக்குள்ளே நானும் நுழைந்து விட்டேனே!-இனி
எந்தன் தேசத்து மக்களுக்கெல்லாம் விடிவு காலமே!-தோல்வி
எனற எதுவும் என்னை இனியென்றும் அணுகாது உறுதியே!தனியுடைமை
எந்த தடையும் என்னை எதுவும் செய்திட முடியாதே!

உழைப்பவரின் ஒற்றுமை நம்மோடே உள்ளவரையினில்
நெருங்காதே தோல்விகளே நம்முரிமைப் போரினிலே!- நமதுண்மை
சுதந்திர போரினிலே எத்தனை தியாகிகள் பலியானாரோ?-அவரின்
அடிச்சுவட்டினில் நாமும் தியாகதீபத்தை ஏற்றி வைப்போமே!

இதுவரை நடந்த போராட்டமெல்லாம் நாமே
அனுபவமாக்கியே வீறு நடை போடுவோமே?
வறுமையில்லாத பொன்னுலகை உருவாக்குவோமே!
உரிமைவெல்லும் வேள்வியிலே அடியெடுப்போமே!~

மார்க்சீய தத்துவத்தை காலத்திற்கேற்ப நடைமுறையில்- நம்
நாட்டிற்குகந்த நல்வழியினில் செயல்வழியில் முன்னேற்றுவோமே!
ஏகாதிபத்தியத்தை கண்டு ஒருபோதும் அஞ்சிடோமே!
மேதைலெனின் ,ஸ்டாலினின் நல்வழியினில் பொதுவுடைமையாம்
மேதகு பாதையினில் காலத்திற்கேற்றவாறு நல்லுலகினைப் படைத்திடுவோமே!












சனி, 5 பிப்ரவரி, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்-”ருத்ர தாண்டவமாடிடுமே!

மண்ணகம் பிளந்துவிடும் நில நடுக்கமே
மனைகள் வீழ்ந்துவிடும் பிரளயமே
மாடமாளிகை கோபுரங்கள்
மண்ணுக்குள் போய்விடும் -வீடுகள்
கூரைகளும் விழுந்துவிடும்

அழகிய வனங்களும் அழகற்று போயிவிடும் -யுகப்
பிரளயமாகி மனிதத்தையே பயமுறுத்திவிடும்
பொங்கிவிடும் கடல் அலைகளுமே!
சுனாமியும்கூட எழுந்துவீழ்கின்ற தாண்டவமது!
ஊழிப் பேரலைகளும் ருத்ர தாண்டவமாடிடுமே!

சனி, 29 ஜனவரி, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”அமுதான வாசிக்கும் தன்மை தானடி!

இந்த யுகத்தில் இந்த இகத்தில் மனித அகத்தில்
சுகமென்று சொல்வது ஒன்றுதானடி!
அதுவும் அறிவான புத்தகங்களையே படிக்கின்ற
அமுதான வாசிக்கும் தன்மை தானடி!










தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”

ஞாயிறு, 28 நவம்பர், 2010

தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் /-"பெண்கள் நாங்கள் "

ஆண்டாண்டு காலமாய்
ஆணாதிக்க சமூகத்தில பெண்கள் நாங்கள்!
வாழ்ந்து வருகின்ற சமுதாயத்தில்
வாழும் இல்லங்களில் பெண்களாம்
நாங்கள் வாழ்கின்ற பொழுதினிலே!
எங்களைச் செல்லமாய் திட்டினால் கூட
சிணுங்கிக் கொண்டு முகத்தைத்
திருப்பிக் கொள்ளமுடியும் என்றால், அது!
பிறந்த வீட்டில் மட்டுமே பெண்ணுக்குச் சாத்தியம்
எல்லைதனைத் தாண்டாமல்
தொல்லையின்றி உலாவருவது என்று எண்ணிக்கொண்டு
வலம்வருவது பிறந்தவீட்டில்தான் !

புகுந்தவீடு
இந்த வார்த்தைகளே!! பெண்களைத்
துன்பப் படவைக்கிறது!இருந்த
பிறந்தவீட்டை விட்டு
அன்னியமாய் புகுந்தவீட்டை பெண்கள் நாங்களோ!
எதிர்கொள்ளும் தடைகள்தான் எத்தனையோ?

ஒருசில மாமியார்களின் ஏற இறங்கப் பார்வைகள்!
மிகப்பல நாத்தனார்களின் சாடை மாடை பேச்சுக்கள்!
ஒருசில கொழுந்தனார்களின் அதிகார ஆதிக்கங்கள்!
இத்தனைத் தடைகளையும் தாண்டி
அந்த புகுந்தவீட்டில் சுதந்திரமாய் நடைபோடத் துடித்திடும்
எங்களின் போராட்டங்கள்!
மிகச்சில மாமியார்களின் மகளாய் பாவித்து
அன்புசெலுத்திடும் பாலைவனத்தில் ஒரு நீரூற்றும் உண்டு!

பெண்கள்
பொறுப்புணர்வோடு புகுந்தவீட்டில் முழுமைபெற
மறுபடியும் போராடி பெண்ணடிமையாய் ஆகின்றது தான் எதார்த்தம்!

தாயாய், தாரமாய், மகளாய், பேத்தியாய்
எத்தனை அவதாரம் எடுத்தாலும்
அத்தனையிலும் சமூகக் கட்டுப் பாடு என்று
அடிமைப் படுத்தும் தொடரும் அவலங்கள்!

எவ்வளவு கற்றாலும் எவ்வளவு பதவியில் உயர்ந்தாலும்
இன்னும் பெண் தானே என்று கேவலமாய் பார்க்கின்ற வக்கிரங்கள்!
பாலியல் கொடுமையில் இன்னும் விடுபடாமல்
நாள்தோறும் அல்லல்பட்டு துயருக்குள்ளாகும் பெண்கள்! நாங்கள்







புதன், 20 அக்டோபர், 2010

தமிழ்பாலா-/காதல்-/கவிதை/தத்துவம்/-”அழிக்கின்ற செயல்தத்துவம் ”

நெஞ்சகத்தில் நீயிருக்க நின்னையல்லால் ஒருவரையே நினைத்திடுவேனோ?
அஞ்சுகமே நீசிரிக்க நான்சிரிக்க நாளெல்லாம் சந்தோசம் தானோ?
வஞ்சகமே வீழ்த்துகின்ற நல்லுள்ளம் கொண்டு இருப்பது சரிதானே!
இச்சகத்தில் தனியுடைமை அழிக்கின்ற செயல்தத்துவம் முறைதானே!